குடிநீர் கேட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தினால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
கோயம்புத்தூர் பாப்பம்பட்டி ஊராட்சி நிர்வாகம், அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதாகவும், இது தனியார் குடிநீர் ஆலைகளுக்கு சாதகமாக உள்ளதாகவும் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.