இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாமதமின்றி உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட ஒதுக்கீட்டை அரசு இன்றே செயல்படுத்தியிருக்கலாம், ஆனால் அதனை அமல்படுத்த 10 ஆண்டுகள் ஆகும் என்றும் அது நடைமுறைக்கு வருமா என்பது கூட யாருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அரசு கொண்டு வந்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதனால், நாடு தழுவிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.