எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை எதிர்கொள்ள பிரளை ஏவுகணைகளை வாங்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் கிழக்கு லடாக்கின் அசல் எல்லைக் கோடு அருகில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையின் பக்கபலமாக இந்த ஏவுகணைகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
150 கிலோமீட்டர் முதல் 500 கிலோமீட்டர் வரை மிக அதிக தொலைவுக்கு 700 கிலோ எடை கொண்ட வெடிப்பொருளுடன் தாக்குதல் தொடுக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தவை பிரளய ஏவுகணைகள்.
டி.ஆர்.டி.ஓ.வால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்யும் என்று கருதப்படுகிறது.
சீனாவும் பாகிஸ்தானும் இதுபோன்ற ஏவுகணைகளை ஏற்கனவே ராணுவத்தில் இணைத்துள்ளன.