AKASA விமான நிறுவனம் அண்மையில் பணியில் இருந்து விலகிய 43 விமானிகளுக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
விமானங்களின் நேரத்தை மாற்றியமைப்பதன் காரணமாகவும் ரத்து செய்யப்பட்டதாலும் 22 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்கு காரணமாக அந்த விமானிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் 43 விமானிகள் பணியில் இருந்து விலகப் போவதை முன்கூட்டியே அறிவிக்காமல் திடீரென விலகி வேறு விமான நிறுவனங்களில் பணியில் சேர்ந்தனர்.இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆகாசா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.