ஜி 20 உச்சி மாநாடு சில தினங்களில் டெல்லியில் தொடங்க உள்ள நிலையில் ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம் மேற்கொள்கிறார்.
தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட ஆசியான் கூட்டமைப்பின் 10 உறுப்பு நாடுகளுடன் விவாதம் நடத்த சிறப்பு அழைப்பாளர்களான ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய 8 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.
இன்று இரவு அவர் இந்தோனேசியா புறப்பட்டு மாநாட்டில் பங்கேற்ற பின்னர் மறுநாளே டெல்லி திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலோர பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.