டெல்லியில் இன்று அகில பாரத சிக்சா சமாகம் எனும் கல்வி சார்ந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
பிரகதி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகையில் நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையின் மூன்றாவது ஆண்டு நிறைவு தினமும் கொண்டாடப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கல்வி முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அகிலபாரதிய சிக்சா சமாகம் முறையில் கல்வி கற்கும் மாணவர்கள், செயல்திறன் மிக்கவர்களாகவும் உற்பத்தித் திறன், நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி மற்றும் பாடத்திட்டம் தொடர்பான புத்தகங்களை 12 இந்திய மொழிகளில் பிரதமர் மோடி இந்நிகழ்வின் போது வெளியிடுகிறார்.