திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மகளிர் உரிமைத் தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை, மாதம் மாதம் மின் கட்டணம் கணக்கீடு, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நம்பியே திமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர் என்றார். தற்போது மகளிர் உரிமைத் தொகை பெற கட்டுப்பாடுகளை விதிப்பது நியாயம் அல்ல என்று அன்புமணி தெரிவித்தார்
மாமன்னன் திரைப்படம் பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு நேரம் கிடைக்கவில்லை என்று அன்புமணி தெரிவித்தார். அப்போது, பாமக பற்றி செய்தியாளர் கூறிய கருத்தை ஏற்க மறுத்த அவர், மக்கள் நினைக்காத ஒன்றை திணிக்கக் கூடாது என்று ஆவேசமடைந்தார்.