லோன் ஆப் மூலம் ஐடி கம்பெனி ஊழியர்கள் அதிகமாக ஏமாந்தது ஆய்வில் தெரியவந்துள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன மற்றும் திருட்டுபோன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் பத்ரி நாராயணன் பங்கேற்றார்.
சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புடைய 162 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சைபர் கிரைமில் ஆறரை கோடி ரூபாய் அளவிலான பணமோசடி புகார்கள் வந்துள்ளன எனவும், அவற்றில் 6 கோடி ரூபாய் வரை வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.