பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்திடும் வகையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புமாறு தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையும் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். பல்வேறு காரணங்களைக் கூறி பல முறை தள்ளிவைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை இம்முறையாவது திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.