​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இடை நிலை ஆசிரியர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம், 90-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம்

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில், இதுவரை 90க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். திங்கட்கிழமை தொடங்கி 3வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர். மயக்கமடைந்த 90-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை...

ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரித் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரித் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.  மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழக அரசும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

லக்னோவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்

உத்தரப்பிரதேசம் லக்னோவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திச் சட்டமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத அரசைக்...

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வெளியேற்றம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாத ஊதியமாக 7 யிரத்து 700 ரூபாய் பெறும் இவர்கள், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை...

நாடு முழுவதும் இன்று ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் நாள்

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ஆசிரியரின் தனிச்சிறப்பை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு... எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். நமக்கு அகரத்தை சொல்லித் தந்து ஆக்கத்தை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றியும் அன்பும் செலுத்தும் நாள் இந்த...

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். கல்வியை வளர்ப்பதில் புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பமும் முக்கியப் பங்காற்ற முடியும் என்று மோடி தெரிவித்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதனை படைத்த ஆசிரியர்களை அவர் சந்தித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டார்....

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் நடைபெற்றுவருகிறது. தமிழக மாணவர்களில் 100-ல் 15 பேருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா...

புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதிய நிலுவையை கேட்டு பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 32 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள்...

தலைமை ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வந்த பள்ளிகளில் பணிகள் நிரபப்பட்டன - செங்கோட்டையன்

தமிழகத்தில் தலைமை ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வந்த ஆயிரத்து 167 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே நாளில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணிகள் நிரப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்....

அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் - நாராயணசாமி

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி பூராணாங்குப்பம் அரசு நடுநிலை பள்ளியில், மாநிலத்தின் முதல் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி...