கேரளாவில், 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் டெபாசிட் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், பாலக்காயம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கள உதவியாளராக பணிபுரிந் துவந்த சுரேஷ் குமார் என்பவர் லஞ்சம் வாங்கியதாக, கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கட்டுக்கட்டாக 35 லட்சம் ரூபாய் ரொக்கம், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபிக்ஸட் டெபாசிட் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்து 25 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டன.
அந்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து 17 கிலோ நாணயங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.