2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிகமிக குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்ற போது அதன் இடத்தை விரைவாக நிரப்புவதற்காகவே 2 ஆயிரம் நோட்டுகள் முதன்மையாக அறிமுகப்படுத்தப்பட்டன என சக்திகாந்த தாஸ் விளக்கமளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாக உயர்மதிப்பு கொண்ட நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர், மொத்த கரன்சி புழக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு வெறும் 10 புள்ளி 8 சதவீதமே என தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் உள்ளதால் பொதுமக்கள் அவசரப்பட வேண்டாமெனவும் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.