திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பணிபுரிந்த துணை வட்டாட்சியர் லஞ்சம் வாங்கியதாக பயனாளி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பொன்னேரியை அடுத்த பெரியகாவனம் பகுதியில் பட்டா வழங்குவதற்காக, துணைவட்டாட்சியராக இருந்த கந்தசாமி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. லஞ்சமாக 5 ஆயிரம் ரூபாயை வழங்கிய பயனாளி அதனை தனது செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளார். பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் காத்திருந்த நிலையில், கந்தசாமி ஊத்துக்கோட்டைக்கு பணியிடமாற்றம் பெற்றதால் அந்த வீடியோவை பயனாளி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து விளக்கமளித்த கந்தசாமி, அந்த பணம் வேறு ஒரு வேலைக்காக பெறப்பட்டதாகவும், பொய்யான தகவல் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.