​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் மாயமான சிறுமி மீட்பு..!

Published : May 19, 2023 10:34 AM

கோவையில் மாயமான சிறுமி மீட்பு..!

May 19, 2023 10:34 AM

கோவை ஒண்டிபுதூரில் மாயமான 12 வயது சிறுமி மீட்கப்பட்டார்.

ஒண்டிப்புதூர்  பகுதியைச்சேர்ந்த அச்சிறுமி நேற்று முன்தினம் மாயமான நிலையில், போலீசார் 5 தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். 

இந்த நிலையில் நேற்று  இரவு பொள்ளாச்சி பேருந்து  நிலையத்தில் நின்றிருந்த ஒருவருடைய செல்போனை வாங்கி தனது தாயாருக்கு பேசி உள்ளார்.

அந்த செல்போனைத் தொடர்பு கொண்டு சிறுமி இருந்த இடத்திற்கு விரைந்த போலீசார், அச்சிறுமியை மீட்டு கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். சிறுமியிடம் இன்று விசாரணை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.