தொலைந்த மொபைல் போனை விரைவாக கண்டுபிடிக்கவும், அதன் செயல்பாட்டை முடக்கி வைக்கவும் இந்தியா முழுமைக்குமான ஒரு கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது.
மத்திய உபகரணங்கள் அடையாள பதிவு என்ற CEIR அமைப்பு தற்போது டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் நடைமுறையில் உள்ள நிலையில் வரும் 17ம் தேதி முதல் மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் கண்டிப்பாக IMEI என்ற 15 இலக்க தனித்துவ எண் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த IMEI எண்ணை CEIR அமைப்பில் பதிவு செய்து காணாமல் போன மொபைலை மீட்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.