கோஹினூர் வைரம் மற்றும் பழங்கால கோயில் சிலைகளை இங்கிலாந்தில் இருந்து மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து லண்டனில் வெளியாகும் டெய்லி டெலகிராஃப் நாளிதழின் செய்தியில், சுதந்திரத்திற்கு முந்தைய காலனியாதிக்க ஆங்கிலேயர் ஆட்சியில் பறிபோன கலைப் பொருட்களை இந்தியா திருப்பி அனுப்புமாறு கேட்கத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பிரதமர் மோடியின் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது இது குறித்து பேசப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இங்கிலாந்து முழுவதும் உள்ள சிறிய அருங்காட்சியங்கள், தனியார் கலைப்பொருள் சேகரிப்பாளர்கள் ஆகியோர் தாமாக முன்வந்து இந்திய கலைப்பொருட்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், டெய்லி டெலகிராஃப் குறிப்பிட்டுள்ள.