டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இரு அவைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஒரே சீருடை அணிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் பேசும்போது, மழைக்கால கூட்டத் தொடருக்கு முன் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்காக அழைப்பாளர்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஆயத்தப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இரு அவை உறுப்பினர்களுக்கான சீருடைகளை தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனம் வடிவமைத்துள்ளதாகவும், மார்ஷல் தகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு மணிப்பூர் தலைப்பாகை அணிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நன்கு அறிந்திருக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.