மக்களுக்கு அதிகாரமளிக்கவும் சமூகநீதியை உறுதி செய்யும் ஆதாரமாகவும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் தேசிய தொழில்நுட்ப தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த மற்றும் சுயசார்புடைய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்றார்.
தொழில்நுட்பத்துறையில் உலகத்துக்கே தலைமை வகிக்க தேவையான அனைத்து திசைகளிலும் இந்தியா தற்போது முன்னேறி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி முதல் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்பம் முக்கியம் என்று தெரிவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டில் வெறும் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது ஒரு லட்சம் அங்கீகரிக்கப்பட்ட துளிர்நிலை நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.