நெல்லை மாவட்டத்தில் நதி நீர் இணைப்பு திட்டப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், தாஜ்மஹாலை கட்டியதைவிட இந்தத் திட்டப் பணிகள் அதிக நாட்கள் நடப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து வெள்ளக் காலங்களில் கடலில் வீணாக கலக்கும் நீரை, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் 2009-ஆம் ஆண்டில் நதி நீர் இணைப்பு பணிகள் தொடக்கப்பட்டது.
இதில், தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாற்றை இணைக்கும் பணிகளை நெல்லை பொன்னாக்குடி பகுதியில் சபாநாயர் அப்பாவு உடன் இணைந்து துரைமுருகன் பார்வையிட்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.