காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெண் கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவை பின்னுக்குத் தள்ளப்பட்டதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.
கர்நாடகாவின் சிவமொக்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் பொய்களை பரப்பி வருவதாகவும், அதனால் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் மற்றும் வளர்ச்சி வெறும் காகித அளவில் மட்டுமே இருக்குமெனவும், காங்கிரசால் ஒருபோதும் கர்நாடகவின் வளர்ச்சிக்கு உதவ முடியாது எனவும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்ட போதும் உரத்தட்டுப்பாடு ஏற்படாதவாறும், அதன் விலை உயர்ந்த போதும் அதனை விவசாயிகளைச் சுமக்க விடாமல் மத்திய அரசு செயல்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இன்று நீட் தேர்வு நடைபெற இருந்ததால் முன்னதாகவே வாகன பேரணி சென்றதாகவும், மக்களின் ஏகோபித்த அன்பை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.