ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சோனிக் விமானத்தை உருவாக்க இங்கிலாந்து நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட டெஸ்டினஸ் என்ற நிறுவனம் மேற்கண்ட வகை விமானங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன் முன்மாதிரி இந்த ஆண்டின் இறுதிக்குள் உருவாக்கப்படும் என டெஸ்டினஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக டெஸ்டினஸ் கான்செப்ட் என்ற தலைப்பில் ஹைப்பர்சோனிக் வகை விமானங்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தவகை விமானங்கள் தற்போதுள்ள வணிக விமானத்தின் பயண தூரத்தில் கால் பாகத்தைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு உருவாக்கப்படும் ஹைப்பர்சோனிக் விமானத்தின் மூலம் நான்கே மணி நேரத்தில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.