சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகரை சந்தித்து வலியுறுத்துவோம் என்றும் அவர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இதுவரை நடைபெறாத அளவிற்கு மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெறும் என்றார்.