​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் ஆணையத்தின் முடிவின் மூலம் தர்மம் வென்றுள்ளது- செங்கோட்டையன்

Published : Apr 20, 2023 4:31 PM

தேர்தல் ஆணையத்தின் முடிவின் மூலம் தர்மம் வென்றுள்ளது- செங்கோட்டையன்

Apr 20, 2023 4:31 PM

திமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்தின் முடிவின் மூலம் தர்மம் வென்றுள்ளதாகவும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக பொதுக்குழு தொடர்பான விவகாரங்களில், நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதிமுக வீறுகொண்டு எழும் எனவும் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை வேறு யாராவது பயன்படுத்தினால் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.