சூடானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக இந்தியாவுக்கான சூடான் தூதர் அப்தல்லா ஓமர் பஷீர் எல்ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கிடையே நீடித்து வரும் மோதல் காரணமாக பல்வேறு இடங்களில் வன்முறை தலைவிரித்தாடியது.
வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூடானில் சுமார் 3 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் படிப்படியாக சூடானில் வசிக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சூடான் நாட்டு தூதர் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.