​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜர்..!

Published : Mar 11, 2023 2:48 PM

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜர்..!

Mar 11, 2023 2:48 PM

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகளின் சட்டமேலவை உறுப்பினருமான கவிதா இன்று ஆஜராகியுள்ளார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டதாகவும், இதில் கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் சவூத் குரூப் நிறுவனம் அடைந்த பலனுக்காக 100 கோடி ரூபாய் வரை ஆம் ஆத்மி கட்சி லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சருமான மணிஸ் சிசோடியா உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, கவிதாவுக்கு அமலாக்கத்துறை கடந்த 8ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது.

இதையேற்று இன்று ஆஜரான கவிதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.