​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி - இஸ்ரோ எச்சரிக்கை

Published : Mar 11, 2023 8:31 AM

கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி - இஸ்ரோ எச்சரிக்கை

Mar 11, 2023 8:31 AM

கோயம்புத்தூர், நீலகிரி உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எச்சரித்துள்ளது.

இஸ்ரோவின் கீழ் இயங்கும், தேசிய தொலை உணர்வு மையம் சார்பில் நாட்டில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 147 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதி என கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிலச்சரிவுக்கு உள்ளான ஜோஷிமத் நகரத்தின் சமோலி மாவட்டம், 19வது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் கோவை 36வது இடத்திலும், திண்டுக்கல் 41வது இடத்திலும் உள்ளன.

மேலும் கன்னியாகுமரி 43வது இடத்திலும், தேனி மாவட்டம் 59வது இடத்திலும் உள்ளன. 72வது இடத்தில் திருநெல்வேலியும், 85வது இடத்தில் நீலகிரியும் இடம்பிடித்துள்ளன.