ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், டெல்லியில் ஆட்டோ சவாரி செய்து மகிழ்ந்தார்.
டெல்லியில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, ஆண்டனி பிளிங்கனுக்கு தூதரக அதிகாரிகள் ஏற்பாட்டின்பேரில் வாடகை ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அமெரிக்க - இந்தியாவிற்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்த உதவியதற்காக தூதரக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிளிங்கென், ஆட்டோவில் பயணம் செய்த படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.