டெல்லியில் நடைபெறும் ஜி20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒருமித்த கருத்துக்கு அழைப்பு விடுத்தார்.
பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் ஆற்றிய உரையில், நம்மைப் பிரிக்கும் காரியங்களில் கவனம் செலுத்தாமல், ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வளர்ச்சி, பொருளாதார பின்னடைவு, பேரழிவை எதிர்கொள்ளும் திறன், நிதி ஸ்திரத்தன்மை, நாடுகடந்த குற்றம், ஊழல், பயங்கரவாதம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றின் சவால்களை எளிதாக்க ஜி20 நாடுகளை உலகம் எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.