இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முதற்கட்டமாக நடப்பாண்டின் பிற்பகுதியில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகள் தாமதமாகி விட்டதாகக் குறிப்பிட்டார்.
நடப்பாண்டின் இரண்டாம் பகுதியில் ககன்யான் திட்டத்தின் இரண்டு தொடக்கப்பணிகள் நடக்கும் என்று குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாக ஆளில்லா விண்கலமும், இரண்டாம் கட்டமாக வியோமித்ரா என்ற ரோபோவும் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
ககன்யான் ராக்கெட் புறப்பட்ட அதே பாதையில் இருந்து பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதே இந்த இரண்டு பணிகளின் நோக்கமாகும் என்று ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.