இங்கிலாந்தில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதாவை விரைந்து நிறைவேற்ற பிரதமர் ரிஷிசுனக்கிற்கு அவரது கன்சர்வேடிவ் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இணையதளங்களை பயன்படுத்தும் குழந்தைகளை ஆபாச வெப்சைட்டுகளிலிருந்து பாதுகாக்க வலைதளங்கள் மிகவும் வலுவான வயது சோதனைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்த சட்ட மசோதா வலியுறுத்துகிறது.