​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை

Published : Jan 25, 2023 12:58 PM

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை

Jan 25, 2023 12:58 PM

கோவையில் 100 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான, தனியார் நிதி நிறுவன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

டிரீம் மேக்கர்ஸ் குளோபஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சதீஷ்குமார், பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, இவரும் இவரது மனைவியும் கடந்த 2019ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கே.கே.புதூரில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், மன அழுத்ததுடன் காணப்பட்ட சதீஷ்குமார், மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மனைவியும் மகளும் தூங்கச் சென்ற நேரத்தில் சதீஷ்குமார், வீட்டின் கீழ்தளத்தில் உள்ள அறையில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அவரது மனைவி கொடுத்த புகாரில் பேரில் வழக்குப்பதிந்து கோவை சாய்பாபா காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.