சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பன்ட் உடல் நிலையில் முன்னேற்றம்... மேல் சிகிச்சைக்காக டெல்லி அழைத்துச் செல்ல ஏற்பாடு
Published : Jan 01, 2023 5:54 AM
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பன்ட் உடல் நிலையில் முன்னேற்றம்... மேல் சிகிச்சைக்காக டெல்லி அழைத்துச் செல்ல ஏற்பாடு
Jan 01, 2023 5:54 AM
கார் விபத்தில் படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட்டை மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் கார் டெல்லி டேராடூன் நெடுஞ்சாலையில் படுவேகமாக சென்று சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதுடன் தீப்பற்றி எரிந்தது. பேருந்து நடத்துனர், ஓட்டுநரால் மீட்கப்பட்ட ரிஷப் பன்ட் டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
ரிஷப் பன்ட் குடிபோதையில் கார் ஒட்டியதாக வந்த செய்திகளை அவருடைய உறவினர்கள் மறுத்துள்ளனர். சாலையில் இருந்த பள்ளம்தான் விபத்துக்குக் காரணம் என்று டேராடூன் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர்கள் அனுபம்கெர், அனில் கபூர் ஆகியோர் மருத்துவமனையில் ரிஷப் பன்ட்டை சந்தித்து நலம் விசாரித்தனர்