உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல், குஜராத்தின் காந்திநகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
100 வயதான ஹீராபென் மோடி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை காலாமானார். இதையடுத்து, அவரது உடல் காந்தி நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி, தனது தாயார் உடலின் முன்பு விழுந்து கும்பிட்டு கண் கலங்கினார்.
பின்னர், ஹீராபென் மோடியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தனது தாயார் உடலை தகன மேடைக்கு தோளில் சுமந்து தூக்கிச் சென்ற பிரதமர் மோடி, இறுதிச்சடங்கிற்கு பின் கண்ணீருடன் தாயார் உடலை தகனம் செய்தார்.
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.