​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அமித்ஷா மரியாதை..!

Published : Oct 21, 2022 1:26 PM

தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அமித்ஷா மரியாதை..!

Oct 21, 2022 1:26 PM

தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார்.

லடாக்கில் கடந்த 1959ம் ஆண்டு சீன படை தாக்குதலில் பலியான 10 ரிசர்வ் படை போலீசாரின் உயிர் தியாகத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ம்தேதி, தேசிய காவலர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி டெல்லியிலுள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமித்ஷா, தாய்நாட்டுக்காக உயிர் நீத்த போலீசாரின் தியாகம் எப்போதும் நினைவு கூரப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.