​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பல்லக்காட்டி தாலி கட்டி.. பறந்து போன பட்டாம் பூச்சி..! தவிக்கும் புது மாப்பிள்ளை..! மானமுள்ள பொண்ணு செய்யுற வேலையா ?

Published : Oct 20, 2022 9:45 PM



பல்லக்காட்டி தாலி கட்டி.. பறந்து போன பட்டாம் பூச்சி..! தவிக்கும் புது மாப்பிள்ளை..! மானமுள்ள பொண்ணு செய்யுற வேலையா ?

Oct 20, 2022 9:45 PM

ஒன்றரை வருடமாக காதலித்து திருமணம் ஆன மூன்றே மாதத்தில், நகை - பணத்துடன் கம்பி நீட்டிய காதல் மனைவியை, போலீசார் உதவியுடன் தாம்பரத்தை சேர்ந்த புது மாப்பிள்ளை தேடி வருகின்றார்

சென்னை  மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் - மேகலா தம்பதியினரின் மூத்த மகன் நடராஜன்.

25 வயதான இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக, தாம்பரத்தில் உள்ள பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது,  அதே பேக்கரியில் பணிபுரிந்த அபிநயா என்ற 28 வயது பெண்ணின் சிரிப்பில் மயங்கி காதலில் விழுந்தார்.  

இவர்களின் காதல் விவகாரம் நடராஜன் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து,அபிநயாவை குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடராஜன்.

குடும்பத்தினருடனும் நெருங்கிப்பழகியதால், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி அபிநயாவை, தங்கள் மகன் நடராஜனுக்கு ரங்கநாதபுரம் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தாம்பரம் காந்தி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து, 4 லட்ச ரூபாய் செலவில் விமர்சையாக திருமண வரவேற்பும் நடைபெற்றது.

மூன்று மாதமாக நடராஜனுடன் நடன ராணியாக வலம் வந்த அபிநயா, 19 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் வீட்டிலிருந்து மாயமானார்.

மனைவியை காணாமல் தவித்துபோன நடராஜன், பெற்றோருடன் சென்று அக்கம் பக்கத்தில் தேடிணார் .

பலமுறை அபிநயாவின் செல்போன் எண்ணிற்கும் தொடர்பு கொண்டபோது, அவருடைய செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

தங்கள் வீட்டு மருமகளுக்கு என்னவானதோ ? என்ற நடராஜன் குடும்பத்தினர் எல்லாம், பதறிப்போய் வீட்டுக்கு திரும்பினர்.

வீட்டிற்கு வந்து பார்த்தால், பீரோவில் வைத்திருந்த 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 20,000 ரூபாய் பணம், விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு, அபிநயா வீட்டில் இருந்து தப்பி ஓடி இருப்பதை, கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரைக்கார பொண்ணு என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அபிநயா, தனக்கு பெற்றோர் இல்லை என்றும், உறவினர்கள் வயதான ஒருவரை திருமணம் செய்து வைக்க முயன்றதால், வீட்டை விட்டு வெளியேறி, சென்னைக்கு வந்து  ஹாஸ்டலில் தங்கி வேலைப்பார்ப்பதாக கதை அளந்து, அனைவரின் மனதிலும் அனுதாபத்தை பெற்றதாகவும், தனது வீட்டில் இருந்த அனைத்து  நகைகளையும் திருடிய அபிநயாவை, கண்டுபிடித்து கொடுக்குமாறும்,  நடராஜன் தாய் மேகலா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தாம்பரம் காவல் நிலையத்தில் அபிநயா மீது புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காதல் கணவனை தவிக்க விட்டு, நகை- பணத்துடன் பறந்து போன களவாணி பட்டாம் பூச்சி அபிநயாவை,  வலைவீசி தேடிவருகின்றனர்