​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடல், மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைப்பு..!

Published : Oct 17, 2022 11:36 AM

வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடல், மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைப்பு..!

Oct 17, 2022 11:36 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வயது மூப்பு காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடல், மருத்துவ ஆராய்ச்சிக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

காளியப்ப கவுண்டன் புதூரை சேர்ந்த திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பு செயலாளராக உள்ள நாகராஜின் தாயார் காவேரியம்மாள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

பெரியார் இயக்கத்தின் மீது பற்றுகொண்ட காவேரியம்மாளின் உடலுக்கு, பெரியார் கொள்கை படி சடங்குகள் ஏதும் செய்யாமல், மூதாட்டியின் உடலை குடும்ப பெண்களே ஊர்வலமாக எடுத்து சென்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.