​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த மத்தியக்குழுவினர்..!

Published : Oct 16, 2022 5:53 PM

நாகை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த மத்தியக்குழுவினர்..!

Oct 16, 2022 5:53 PM

நாகையிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

குறுவை அறுவடை முடிந்த நிலையில், மழையால் நனைந்த நெல்லை கொள்முதலுக்கு அளிக்க முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனால் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது. இதையடுத்து தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, நாகை மாவட்டம் பட்டமங்கலம், வெண்மணி, வலிவலம், எட்டுக்குடியில் இன்றும் ஆய்வு செய்தனர். தீபாவளி நெருங்குவதால் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.