​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் 2 இடங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு சீல்..!

Published : Oct 14, 2022 4:01 PM

கோவையில் 2 இடங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு சீல்..!

Oct 14, 2022 4:01 PM

கோவையில் 2 இடங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்ததாக எழுந்த புகாரில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு இந்தியாவில், 5 ஆண்டுகளுக்கு செயல்பட மத்திய அரசு தடை விதித்த நிலையில்,  கோவை கோட்டைமேடு மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.