மதுரையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து இளம் பெண் ஒருவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பானடி பாக்கியா நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர், நிச்சயதார்த்தம் செய்தனர்.
ஆனால், இந்த திருமணத்தில் கார்த்திகாவிற்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச்சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த கார்த்திகா, உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில், பரிதாபமாக உயிரிழந்தார்.
தெப்பக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.