டெல்லி, கர்நாடகா உள்பட 8 மாநிலங்களில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா இயக்கம் தொடர்புடைய நிர்வாகிகளின் இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு படை மற்றும் அந்தந்த மாநில போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு புகாரின் கீழ் கடந்த 22-ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா இயக்கம் தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
டெல்லி, கர்நாடகா, குஜராத், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில், பிஎப்ஐ உடன் தொடர்புடைய சுமார் 160 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைகளை தொடர்ந்து, டெல்லியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.