ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக ஆதரவு மருத்துவரின் கார்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது கடந்த 24ந்தேதி அன்று மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கேணிக்கரை போலீசார் சிசிடிவி அடிப்படையின் கீழ் 3பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் எஸ்டிபிஐ உறுப்பினர் அப்துல் ஹக்கீம் என்பவருக்கு நேரிடையாக தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை தெரிவித்தார். மற்ற 2பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.