​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கச் சென்ற போது ரூ.1 கோடி மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கிய விபரீதம்.!

Published : Sep 27, 2022 6:33 AM



நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கச் சென்ற போது ரூ.1 கோடி மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கிய விபரீதம்.!

Sep 27, 2022 6:33 AM

நாகையில் நடுக்கடலில் தத்தளித்த  மீனவர்களை மீட்கச் சென்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகில் உண்டான துளை காரணமாக அப்படகு கடலில் மூழ்கியது.

அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பாக்கியலெட்சுமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 24 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த  விசைப்படகு பழுதாகி 13 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர். தகவலறிந்த அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த அருண் என்பவர் 2பேருடன் தனக்கு சொந்தமான விசைப்படகில் அவர்களை மீட்க சென்றுள்ளார்.

ஆனால் அந்த விசைப்படகில் திடீரென விழுந்த ஓட்டையின் காரணமாக படகினுள் கடல்நீர் உட்புக தொடங்கி சிறிது சிறிதாக கடலில் மூழ்கியது.