கோவை பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக 2 பேரை மட்டுமே கைது செய்துவிட்டு, எஞ்சியோரை கைது செய்யாதது ஏன் என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சட்டம் ஒழுங்கை பாதிக்க செய்யும் செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்களுக்கு எதிராக தயவுதாட்சன்யமின்றி முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.