​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குஜராத்தில் பூஜ் நிலநடுக்க நினைவிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

Published : Aug 28, 2022 3:48 PM

குஜராத்தில் பூஜ் நிலநடுக்க நினைவிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

Aug 28, 2022 3:48 PM

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பூஜ் நிலநடுக்க நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தினத்தின்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இவர்களின் நினைவாக பூஜ் நகரில் சர்தார் சரோவார் ஆற்றின் கால்வாய் கரையில் 470 ஏக்கர் பரப்பளவில் ஸ்மிருதிவான் எனும் நிலநடுக்க நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, பூஜ் நிலநடுக்க நினைவிடத்தை திறந்து வைப்பதற்காக சாலை வழியாக பயணம் செய்தார்.

வழிநெடுகிலும் சாலையோரமாக திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் பிரதமரை வரவேற்று முழக்கங்கள் எழுப்பிய நிலையில், தொண்டர்களை பார்த்து உற்சாகமாக பிரதமர் மோடி கைசைத்தார். தொடர்ந்து, பூஜ் நிலநடுக்க நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், குழந்தைகள் உயிருடன் இருந்தபோது எழுதிய கட்டுரைகள், நிலநடுக்கம் குறித்த உணர்வு பார்வையாளர்கள் அறியும் வகையில் 5 டி சிமுலேட்டர் மற்றும் நிலநடுக்கத்தின் அறிவியல் அம்சங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு திரையரங்குகள் என 11 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் 8 பிரிவுகளைக் கொண்ட அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.