டெல்லியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுதும் நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் முறையான சிகிச்சைகள் மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வருவோரை கண்காணிக்கும் பணி, விமான நிலையங்கள், துறைமுகங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்நோய் 75 நாடுகளில் பரவியுள்ளதில் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்