தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளாவில் மூன்று பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது டெல்லியில் வசிக்கும் 31 வயதான நபருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு நான்காக உயர்ந்துள்ளது.
நோய் கண்டறியப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு செல்லாத நிலையில், குரங்கு அம்மை பாதித்து மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.