டெல்லியில் இருந்து மும்பை வரை மின்மய வாகனங்களுக்கான நெடுஞ்சாலை அமைக்கத் திட்டமிட்டு வருவதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரிக் நெடுஞ்சாலை என்பது பயணிக்கும் வாகனங்களுக்கு மின் விநியோகம் செய்யும் பாதையாகும். டிராலி பேருந்து போல அதில் லாரிகளைக் கூட பயணிக்கச் செய்ய முடியும் என்று நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.அனைத்து மாவட்டங்களும் நான்குவழிச் சாலைகள் மூலமாக இணைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்