சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 150 இளைஞர்களிடம் தலா 1 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோயம்புத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வடவள்ளியில் இயங்கி வரும் afford tours and travels நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரப்படுத்தி உள்ளது. அதனை பார்த்து விண்ணப்பித்தவர்களிடம் முன்பணமாக 1 லட்ச ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை பெற்று கொண்டு பணி ஆணை, விமான டிக்கெட்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
சென்னை புறப்பட அவர்கள் தயாரான போது டிராவல்ஸ் நிறுவனம் மூடப்பட்டிருந்ததுடன், விமான டிக்கெட்களும் போலி என்பது தெரியவந்தது. ஏமாற்றபட்டதை உணர்ந்த இளைஞர்கள் டிராவல்ஸ் உரிமையாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளனர்.