மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 13 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 14 சென்டி மீட்டரும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.