குடியரசுத் தலைவர் வேட்பாளரை பா.ஜ.க. இன்று இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று நடைபெறும் பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஒருங்கிணைப்பில் வேட்பாளரை தேர்வு செய்ய 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
வேட்பாளர் தேர்வு குறித்து நேற்று அக்கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிடோருடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இறுதி கட்ட வேட்பாளர் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது.